×

திருப்புட்குழி விஜயராகவ பெருமாள் கோயில் பிரம்மோற்சவம்: இன்று கொடியேற்றத்துடன் துவக்கம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த திருப்புட்குழி விஜயராகவ பெருமாள் கோயில் பிரம்மோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 திவ்வியதேசங்களில் ஒன்றாக காஞ்சிபுரம் அடுத்த திருப்புட்குழி விஜயராகவ பெருமாள் கோயில் விளங்குகிறது. இங்கு இன்று காலை கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவம் தொடங்குகிறது. இதை தொடர்ந்து தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் பெருமாள் சிம்ம வாகனம், கருடசேவை, சேஷ வாகனம், நாச்சியார் திருக்கோலம், சந்திரபிரபை, யாளி வாகனம் வீதி உலா ஆகிய உற்சவங்களும் நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 14ம் தேதி திருத்தேர் உற்சவம் வெகு விமரிசையாக நடக்கிறது. விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் குமரன், கோயில் நிர்வாகிகள், விழா குழுவினர் செய்கின்றனர்.

Tags : Tiruputkuzhi ,Vijayaragava ,Perumal Temple ,
× RELATED ராமச்சந்திர பெருமாள் கோயிலில்...