×

திருமணமான 6 மாதத்தில் இளம்பெண் மாயம்

திருச்சி, மார்ச் 6: திருச்சி எடமலைப்பட்டிபுதூர் பிள்ளையார்கோயில் தெருவை சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி வித்யா(24). இவர்களுக்கு திருமணமாகி 6 மாதங்கள் ஆகிறது. தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்படும். கடந்த 4ம் தேதி இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது வெளியே சென்ற வித்யா, நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. இது குறித்து செல்வம் அளித்த புகாரின் பேரில் எடமலைப்பட்டிபுதூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED வருமான வரித்துறை சொத்துக்களை முடக்கி 6...