ஏடிஜிபி ஆய்வு

திருச்சி, மார்ச் 6: திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், மாநில குற்றப்பதிவேடு துறை ஏடிஜிபி வினித்வாங்கடே தலைமையில் கூட்டம் நடந்தது. இதில் டெல்டா மாவட்டங்களில் உள்ள, மாநகர, மாவட்ட குற்றப்பிரிவு துறை, குற்றப்பதிவேடு ஆவண காப்பக பிரிவு, சிசிபிஎன்எஸ் துறை உள்பட அனைத்து துறை அதிகாரிகள், அலுவலர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் ஏடிஜிபி, குற்ற வழக்கு ஆவணங்களை பராமரித்தல், பாதுகாத்தல் பற்றி விளக்கம் அளித்தார். தொடர்ந்து குற்றப்பிரிவில் எத்தனை வழக்குகள் உள்ளது. இதில் நிலுவையில் உள்ள வழக்குகள் எத்தனை என விசாரணை நடத்தினார்.

Related Stories:

>