திருவாரூர் மாவட்டத்தில் திமுக கூட்டணி வெற்றிக்கு பாடுபட விசி கட்சி முடிவு

திருவாரூர், மார்ச் 6: திருவாரூர் மாவட்டத்தில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினரின் வெற்றிக்கு பாடுபடுவது என விடுதலை சிறுத்தைகள் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருவாரூர் வடக்கு மாவட்ட கூட்டம் மாவட்ட செயலாளர் வடிவழகன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட துணை செயலாளர் கணேசன், திருவாரூர் சட்டமன்ற தொகுதி செயலாளர் பால்நிலவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செய்தி தொடர்பாளர் தங்கதமிழ்செல்வன் வரவேற்றார். இதில் பொறுப்பாளர்கள் பூபாலன், மாதவன், ராஜா, சுந்தரபாண்டியன், சிறைசெல்வன், வெண்மணி ராஜா, உலகநாதன், ஆசைத்தம்பி, சுரேஷ், பாஸ்கரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் திருவாரூர் மாவட்டத்தில் வரும் சட்டமன்ற தேர்தலையொட்டி தி.மு.க.மற்றும் கூட்டணிக் கட்சியினரின் வெற்றிக்கு பாடுபடுவது, வடக்கு மாவட்டம் சார்பில் தேர்தல் நிதியாக ரூ.5 லட்சம் கட்சி தலைமையிடம் வழங்குவது என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories:

>