- திருவையாரு திருவையாரு
- எத்ராம் பள்ளத்தாக்கு
- பெரமூர் ஊராட்சி
- திருவையரு
- பெரமூர் ஒரட்சி
- எட்டாரை
- திருவையாறு
திருவையாறு, ஜூன் 8: திருவையாறு அருகே பெரமூர் ஊராட்சிக்குட்பட்ட எட்டரை வேலி பகுதியில் வைக்கோல் கிடங்கில் ஏற்பட்ட தீவிபத்தில் 5 லட்சம மதிப்பிலான வைக்கோல் மற்றும் தளவாட பொருட்
கள் எரிந்து சேதம் அடைந்தது. திருவையாறு அருகே பெரமூர் ஊராட்சி எட்டரை வேலி பகுதியை சேர்ந்த திருநாவுக்கரசு கிருபானந்தம் ஆகியோருக்கு பெரமூர் -அணக்குடி சாலையில் இருந்த வைக்கோல் கிடங்கு உள்ளது. இந்த கிடங்கில் நேற்று முன்தினம் மாலை 7.00 மணியளவில் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது.
இது குறித்து திருவையாறு, தஞ்சாவூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து 4 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குன் கொண்டு வந்து மேலும் தீபரவாமல் தடுத்தனர். இந்த தீ விபத்தில் கிடங்கில் வைத்திருந்த 800 வைக்கோல் கட்டுகள் விவசாய போர் போடுவதற்கு பயன் படுத்தும் பினோலக்ஸ் பிலாஸ்ட்டிக் பைப்புகள், சொட்டு நீர் பாசனத்திற்கு பயன் படுத்தும் பிளாஸ்டிக் பைப்புகள், வைக்கோல் அடுக்க பயன் படுத்தும் மரபரனி, வீடு வேலைக்கான தேக்கு மற்றும் பூவரசு மர சட்டங்கள், மாட்டு தீவனம், தவிடு உள்ளிட்ட 5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் முற்றிலும் எரிந்து சேதமானது. இது குறித்து தகவலறிந்த திருவையாறு போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
