×

மதுபானக்கடைகளை அகற்றகோரி கும்பகோணத்தில் நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்

கும்பகோணம், ஜூன் 8: கும்பகோணம் பேருந்து நிலையம் அருகிலுள்ள மதுபானக் கடைகளை அகற்றவும், புதிய மாவட்டம் அறிவிக்கவும் தமிழக அரசை வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம். கும்பகோணம் பேருந்து நிலையம் அருகாமையில் செயல்பட்டு வரும் 4 மதுபான கடைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்றும், கும்பகோணத்தை தலைமை இடமாக கொண்டு புதிய மாவட்டத்தை தமிழக அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியின் சார்பில் கும்பகோணம் பழைய மீன் மார்க்கெட் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மண்டல செயலாளர் சுந்தர்ராஜன் தலைமை வகித்தார். மாநில வழக்கறிஞர் பாசறை துணைச்செயலாளர் வழக்கறிஞர் ஆனந்த் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் மாநில ஒருங்கிணைப்பாளரும் வழக்கறிஞருமான மணி செந்தில், மாநில இளைஞர் பாசறை செயலாளர் முகமது யூசுஃப், தெற்கு தொகுதி தலைவர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் சுமார் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்று தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷமிட்டனர்.

இதில் மண்டல செயலாளர் ஞானமணி, மாவட்ட செயலாளர்கள் குருமூர்த்தி, ராஜராஜன், சித்திரை செல்வன், ராஜ்குமார் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

Tags : Naam Tamilar Party ,Kumbakonam ,
× RELATED கிரிக்கெட் விளையாடிய போது ஏற்பட்ட...