காமாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

வலங்கைமான், மார்ச் 6: வலங்கைமான் அடுத்த சித்தன்வாழுர் கிராமத்தில் உள்ள கம்ப காமாட்சி அம்மன் ஆலய கும்பாபிஷேகம் நடைபெற்றது. வலங்கைமான் தாலுகா சித்தன்வாழுர் கிராமத்தில் கம்ப காமாட்சி அம்மன் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி முன்னதாக நான்கு கால யாக பூஜைகள் நடைபெற்றது. வேத விற்பன்னர்கள் வேத மந்திரங்கள் முழங்க மஹா பூர்ணாஹுதி நேற்று காலை 7 மணி அளவில் நடைபெற்று அதனை தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க கடங்கள் புறப்பட்டு ஆலயத்தை வலம் வந்து 8.30 மணி அளவில் விமானம் கோபுரத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Related Stories:

>