மது கடத்தலை கண்காணிக்க சிறப்பு அலுவலர்கள் நியமனம்

திருவாரூர், மார்ச் 6: திருவாரூர் மாவட்டத்தில் தேர்தலையொட்டி மது விற்பனை மற்றும் மது கடத்தலை கண்காணிப்பதற்கு சிறப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் சாந்தா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: 16வது தமிழக சட்டமன்றத்திற்கான தேர்தலையொட்டி திருவாரூர் மாவட்டத்தில் கள்ளத்தனமாக மது விற்பனை மற்றும் மது கடத்தல் போன்றவற்றினை தடுத்திடவும், அரசு மதுபான கடைகளில் விற்பனையை கண்காணிக்கவும் மேலும் இது தொடர்பாக வரும் புகார்கள் குறித்து நடவடிக்கை எடுக்கவும் தாசில்தார் அந்தஸ்தில் இருந்து வரும் 2 அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி டாஸ்மாக் உதவி மேலாளர்கள் இஞ்ஞாசிராஜ் (கைபேசி எண் - 9443448064) மற்றும் அமர்ஜோதி (கைபேசி எண் - 8754848631) நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் இஞ்ஞாசிராஜ் கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையிலும், அமர்ஜோதி பறக்கும் படையிலும் பணி செய்வதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.  எனவே மாவட்டத்தில் மதுபானங்கள் தொடர்பான புகார்களை மேற்கண்டவர்களின் கைபேசி எண்களில் தெரிவித்தால். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் இவ்வாறு கலெக்டர் சாந்தா தெரிவித்துள்ளார்.

Related Stories: