×

போக்குவரத்து பாதிப்பு ஜெயங்கொண்டம் நகராட்சி பகுதியில் மின் பற்றாக்குறையால் மோட்டார்கள் பழுது பொதுமக்கள் வேதனை

ஜெயங்கொண்டம், ஜூன் 8: ஜெயங்கொண்டம் நகராட்சி பகுதியில் மின்சார பற்றாக்குறையால் மோட்டார்கள் பழுது பொதுமக்கள் வேதனை அடைந்தனர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சியில் சின்ன வளையம் செங்குந்தபுரம் வேலாயுத நகர் சீனிவாசன் நகர் கீழகுடியிருப்பு மேல குடியிருப்பு உள்ளிட்ட 21 வார்டுகளை அடங்கிய நகராட்சி பகுதியில் கடந்த சில நாட்களாக குறைந்த அழுத்த மின்சாரம் நிலவி வருகிறது. இதனால் பல்வேறு பகுதிகளில் மின் மாற்றிகள் பழுதாகி வருகின்றன மேலும் பல்வேறு வீடுகளில் மின் சாதனங்கள் பழுதாகி வருகின்றன. சின்ன வளையம் கிராமத்தில் இரண்டு மேல்நிலை நீர் தேக்க தொட்டிக்கான மின்மாற்றிகள் பழுதானது.

இதனால் பொதுமக்கள் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டது என கூறி நகராட்சியினருக்கு தகவல் தெரிவித்தனர் நகராட்சி நிர்வாகம் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக குடிநீர் டேங்கர் லாரியில் கொண்டு வந்து தெருக்களில் வீடுகளுக்கு வழங்கி வருகின்றனர். இது மட்டுமல்ல பல்வேறு வீடுகளிலும் ஆழ்துளை கிணறு அமைத்து மோட்டார்கள் இயங்காமல் அப்படியே கிடப்பில் உள்ளது சில இடங்களில் அரை மணி நேரத்தில் டேங்க் முழுவதும் நிரம்பக்கூடிய அளவான மின்சாரம் 2 மணி நேரத்திற்கு மேலாக மோட்டார் இயங்கியும் தண்ணீர் டேங்கில் நிரம்ப வில்லை இதனால் மின் கட்டணம் உயர்வதுடன் நீண்ட நேரம் இயங்குவதால் மோட்டார் பழுதாகி வருகின்றன.

மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மின்சாரம் கொண்டு வரப்படுமா. மின்வாரியத்தினர் கடந்த சில வருடங்களுக்கு முன் இது போன்ற பிரச்னைகள அடிக்கடி வந்ததால் ஜெயங்கொண்டம் நகராட்சியில் பல இடங்களில் 192 மின் மாற்றிகள் அமைத்து சீரமைக்கப்பட்டது மீண்டும் மின் பற்றாக்குறை இருந்து வருகிறது. இந்த நிலை மீண்டும் குறைந்த தாழ்வு அழுத்த மின்சாரம் சீரமைக்கப்பட வேண்டும் என நகராட்சி, மின்வாரியத்திற்கு இப்பகுதி பொதுமக்கள் வேதனையுடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Tags : Jayangondam ,Ariyalur District ,Jayangondam Municipality ,Small Ring Sengundapuram ,Velayutha Nagar Sinivasan Nagar Lower Residential Upper Residence ,
× RELATED தன்னார்வ குருதி கொடையாளருக்கு பாராட்டு