×

தமிழக அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பி குடிநீர் வராததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

தா.பழூர், ஜூன் 8: தமிழக அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பி மின்சாரம், குடிநீர் வராததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போரட்டத்தில் ஈடுபட்டனர். அரியலூர் மாவட்டம் தா.பழுர் ஒன்றியம் காரைக்குறிச்சி கிராமத்தில் கடந்த ஒரு வார காலமாக மின்சார தட்டுப்பாடு மற்றும் குடிநீர் சரியாக வராததை கண்டித்து பொதுமக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் கண்டு கொள்ளவில்லை ஆத்திரமடைந்த பொதுமக்கள் காரைக்குறிச்சி தா.பழூர் சாலையில் காலி குடங்களுடன் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டம் நடத்தினர். காரைக்குறிச்சி பகுதியில் அடிக்கடி மின்சார தட்டுப்பாடு காரணமாக மின் வினியோகம் இல்லாமல் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

மேலும் இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் கூறிய அப்பகுதி மக்கள் தங்களுக்கு தடையில்லா மின்சாரமும் குடிநீரும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்து பேசினர். மேலும் சரியான நடவடிக்கை எடுக்கா விட்டால் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம் என எச்சரிக்கை விடுத்தனர். மேலும் தமிழக அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். இதுகுறித்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தா.பழூர் போலீசார் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததன் பேரில் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் காரணமாக தா.பழூர்-அருள்மொழி சாலையில் இருபுறமும் நீண்ட வரிசையில் கனரக வாகனங்கள் இலகுரக வாகனங்கள் பேருந்துகள் பாதிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் போக்குவரத்தை சீர் செய்தனர்.

இதனால் அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது மறியலில் ஈடுபட்ட அப்பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் இரவு முழுவதும் தங்களது குழந்தைகளுக்கு விசிறி மட்டையால் விசிறி தூங்க வைப்பதும், பகலில் தண்ணிக்காக அலைவதும் என மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றோம் எங்களுக்கு காசு வேண்டாம், பணம் வேண்டாம் மின்சாரம், குடிக்க குடிநீர் வழங்கினால் போதும் என மனக்குமுறலுடன் பெண் ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார். இதில் பொதுமக்கள் தமிழக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags : Tamil Nadu government ,Tha.Pazhur ,Karaikurichi ,Ariyalur district ,
× RELATED தன்னார்வ குருதி கொடையாளருக்கு பாராட்டு