×

அரியலூர் உடையார்பாளையம் அருகே விபத்து: காயமடைந்தவரின் பணத்தை உறவினரிடம் ஒப்படைத்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள்

ஜெயங்கொண்டம், ஜூன் 8: அரியலூர் உடையார்பாளையம் அருகே விபத்தில் காயமடைந்த வரின் பணத்தை உறவினரிடம் ஒப்படைத்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களை பொதுமக்கள் பாராட்டு குவிந்தது. அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் தாலுகா இடையார் பஞ்சாயத்து அலுவலகம் சாலை அருகே நேற்று முன்தின இரவு எதிர்பாராத விதமாக டூவீலர் விபத்து ஏற்பட்டு பதிக்கப்பட்ட கள்ளக்குறிச்சி சேர்ந்த வேல்முருகன்(50) என்பவருக்கு மருத்துவ சிகிச்சை அளித்து 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைகாக சேர்த்தனர். மேலும் அவரிடம் இருந்த ரூ. 57,520 ரொக்க பணத்தை பத்திரமாக எடுத்து ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனை செவிலியரிடம் அவசரகால மருத்துவ நுட்புநர் வேலுசாமி மற்றும் பைலட் ஹரிகிருஷ்ணன் இருவரும் ஒப்படைத்தனர். 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களின் இத்தகைய நற்செயலை கண்டு செவிலியர்கள் மருத்துவர்கள், பொதுமக்கள் பாராட்டினர்.

Tags : Ariyalur Udayarpalayam ,Jayankondam ,Edayar Panchayat ,Udayarpalayam taluk, Ariyalur district… ,
× RELATED ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பஞ்சு மில்லில் பயங்கர தீ விபத்து