×

கொள்ளிடத்தில் பருத்தி அறுவடை பணிகள் துவங்கியது

கொள்ளிடம், ஜூன் 8: கொள்ளிடத்தில் பருத்தி விலை குறைந்ததால் விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் பகுதியில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிக அளவில் நிலப்பரப்பில் விவசாயிகள் பருத்தி சாகுபடி செய்துள்ளனர். பல இடங்களில் பருத்தி அறுவடை பணிகள் தொடங்கி நடந்து வருகிறது. இந்த சூழலில் பருத்தி பயிரில் நோய் தாக்குதல் காணப்படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். இது குறித்து விவசாயிகள் கூறுகையில், கடந்த ஆண்டு பருத்தி விலை ஒரு குவிண்டால் பத்தாயிரத்திற்கும் மேல் விற்பனையானது. அதனால் இந்த ஆண்டும் நல்ல விலை போகும் என்ற நோக்கில் பருத்தி சாகுபடியில் தீவிரம் காட்டி வந்தோம்.

ஆனால் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு பருத்தி விலை குறைந்துள்ளது. இது விவசாயிகள் அனைவரிடம் வேதனையை அளிக்கிறது. இந்த நிலையில் தற்போது பருத்தி செடியில் மாவு பூச்சி தாக்குதல் அதிகரித்து வருகிறது. நோய் தாக்குதல் காரணமாக பருத்தி செடி காய்ந்து சேதம் அடைந்து வருகிறது. அதிகம் செலவு செய்து விவசாயிகள் பருத்தி சாகுபடி செய்து உள்ளோம். இந்த நிலையில் பூச்சி தாக்குதல் தென்படுவதால் மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளது.

தற்பொழுது பருத்தி செடிக்கும் பூச்சி மருந்து அடிக்க ஆட்கள் கிடைக்காததால் ட்ரோன் மூலம் மருந்து அடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். இருந்தும் அதிக செலவு செய்து பருத்தி அறுவடை செய்யும் பட்சத்தில் பருத்தி விலை சென்று ஆண்டை விட இந்த ஆண்டு குறைந்து விட்டதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். எனவே பருத்தி கொள்முதல் விலையை அதிகரிக்க வேண்டும் என்றனர்.

விலை குறைந்ததால் விவசாயிகள் அதிருப்தி
மேலும் தொடர்ச்சியாக இப்பள்ளியில் 99 %மற்றும் 100% தொடர்ச்சியாக தேர்ச்சி பெற்று வருகின்றனர். மேலும் இப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள் மருத்துவர்கள் இன்ஜினியர்கள் மற்றும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குகின்றனர்.

Tags : Kollidam ,Mayiladuthurai district ,
× RELATED சிவகாசியில் பெண்களை கேலி செய்த 3 பேர் கைது