பேராவூரணி கடைவீதியில் சாலையில் பரவி கிடந்த மணல் அகற்றம்

பேராவூரணி, மார்ச் 6: பேராவூரணி கடைவீதியில் முக்கிய சாலைகளில் பரவலாக கிடந்த மணலை தினகரன் செய்தி எதிரொலியாக, பேரூராட்சி நிர்வாகம் அகற்றியது. பேராவூரணி கடைவீதி, சேதுசாலை, பட்டுக்கோட்டை சாலை, அறந்தாங்கி சாலை உள்ளிட்ட இடங்களில் சாலைகளில் பரவலாக கிடக்கும் மணலால் சுவாச பிரச்சனை ஏற்பட்டது. மேலும், வாகனங்களில் செல்வோர் சறுக்கி கீழேவிழுந்து விபத்துகள் ஏற்படுவது, போன்ற செயல்கள் அடிக்கடி நடந்து வந்தது. இதனால் மணலை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியிருந்தனர். இது குறித்து தினகரன் நாளிதழில் படத்துடன் விரிவான செய்தி வெளியிடப்பட்டது.

இது குறித்து பேரூராட்சி செயல் அலுவலர் மணிமொழியன் உத்தரவின்படி, துப்புரவு ஆய்வாளர் அன்பரசன், துப்புரவு மேற்பார்வையாளர் சுப்பிரமணியன் ஆகியோர் மேற்பார்வையில் தூய்மை பணியாளர்கள் சாலையில் கிடந்த மண்ணை அகற்றி தூய்மைப்படுத்தினர். இதனால், தற்போது சாலை தூய்மையாக காணப்படுவதுடன், பேருந்து செல்லும் போது தூசு பறப்பது குறைந்துள்ளது. தினகரன் செய்தியால் உரிய நடவடிக்கை எடுத்த பேரூராட்சி நிர்வாகத்திற்கும், செய்தி வெளியிட்ட தினகரனுக்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

Related Stories:

>