கந்தர்வகோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
திமுக கூட்டணிக் கட்சிகளிடம் கையேந்தி, கெஞ்சி ஆதரவு பெற்றுள்ளார் விஜய். 08 தொகுதி தானே உங்களுக்கு மக்கள் கொடுத்துருக்காங்க. ஆட்சியில் இருந்து கொண்டு ரீல்ஸ் ஓட்ட முடியாது. ஆளுங்கட்சியைவிட எதிர்க்கட்சி அதிக இடங்களில் வென்று உள்ளது என்பதை ஆட்சியில் உள்ளவர்கள் உணர வேண்டும். மாற்றம் வேண்டும் என்ற பெயரில் ஒரு பேராபத்தை ஆட்சியில் அமர்த்தி இருக்கிறார்கள் தமிழ்நாட்டு மக்கள். வாக்குறுதிகளை நிறைவேற்ற அவகாசம் கேட்கலாம் ஆனால், சட்டம் ஒழுங்கை சரி செய்ய அவகாசம் கேட்கக்கூடாது.
அஅதிமுக தீர்ந்து போன சக்தி ஊழல் சக்தி என்கிறீர்கள். ஆனால் அவர்கள் எம்எல்ஏக்களிடம் ஆசையை காட்டி, சின்ன பிள்ளைகளுக்கு பிஸ்கட் கொடுத்து அவர்களை தூக்குவது போல், அதிமுக எம்எல்ஏக்கள் 25 எம்எல்ஏக்களை தனியணியாக்கி அவர்களின் ஆதரவை பெற்று நீங்கள் ஆட்சி அமைத்த நிலையில் அந்த எம்எல்ஏக்கள் இன்று ரோட்டில் நிற்கின்றனர். நீங்கள் இன்று தான் நீர்க்குமிழி போல வந்துள்ளீர். அதிமுக நீர்த்து போன கட்சி என்று சொல்வதற்கு உங்களுக்கு என்ன அதிகாரம் உள்ளது. கம்யூனிஸ்ட் கட்சிகளும், திருமாவளவனும் தாங்கள் இந்த ஆட்சிக்கு ஆதரவு கொடுத்தது தவறு என்பதை உணருகின்ற காலம் விரைவில் வரும். அண்ணாமலை எனக்கு அரசியலை கடந்து நல்ல நண்பர். அவர் பாஜவில் இருந்து விலகியது எனக்கு வருத்தம் அளிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
