பாஜக நிர்வாகிகள் கூட்டம்

அறந்தாங்கி, மார்ச் 6: அறந்தாங்கியில் தெற்கு ஒன்றிய பாஜக நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. ஒன்றிய தலைவர் கருணா தலைமை வகித்தார். மாநில மகளிரணி செயலாளர் கவிதா காந்த் பங்கேற்று பேசினார். கூட்டத்தில் மாநில அமைப்பு பொது செயலாளர் கேசவ விநாயகன்ஜி ஆலோசனைபடி வருகிற 7, 8, 9, 10 ஆகிய தேதிகளில் நடைபெறும் “வெற்றி கோடி ஏந்தி வெல்வோம் தமிழகம்” நிகழ்ச்சியை சிறப்பாக நடத்துவது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. மேலும் கூட்டத்தில் ஊராட்சி வாரியாக பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். கூட்டத்தில் மாவட்ட இளைஞரணி தலைவர் சக்தி குமரன் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Related Stories:

>