திருமலையில் மலைப்பாதையில் சுற்றித்திரிந்த கரடி: பீதியடைந்த பக்தர்கள்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் தங்களது வேண்டுதலுக்கு ஏற்றார்போல் மலைப்பாதையில் பாதயாத்திரையாக சென்று சுவாமியை தரிசனம் செய்கின்றனர். அவ்வாறு திருப்பதியிலிருந்து திருமலை செல்லும் இரண்டாம் மலைப்பாதையில் நேற்று இரவு ஒரு கரடி வந்தது.

அலிபிரி சோதனைச் சாவடியிலிருந்து 1 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள விநாயகர் கோயிலுக்கு அருகில் வரை கரடி சுற்றி அலைந்து திரிந்த, பின்னர் கரடி அங்கிருந்த குப்பைத் தொட்டிகளில் உணவு தேடி அலைந்தது. இதைக்கண்ட பக்தர்கள் பீதியடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் மற்றும் தேவஸ்தான விஜிலென்ஸ் பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கரடியை வனப்பகுதிக்குள் விரட்டி அனுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: