×

வாங்கப்பாளையம் அருகே சிதிலமடைந்த நிழற்குடை சீரமைக்கப்படுமா?

கரூர், மார்ச்6: கரூர் வெங்கமேடு வாங்கப்பாளையம் இடையே பல ஆண்டுகளாக நிழற்குடை அமைக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்தது. கரூர் வாங்கப்பாளையம் பகுதியில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் அனைத்து தரப்பினர்களும் நிழற்குடையை பயன்படுத்தி வருகின்றனர். போதிய பராமரிப்பு இல்லாத காரணத்தினால் இருக்கைகள் உடைந்து மிகவும் மோசமான நிலையில நிழற்குடை உள்ளது. எனவே, மக்கள் எளிதாக பயன்படுத்தும் வகையில் இந்த பழுதடைந்த நிலையில் உள்ள நிழற்குடையை சீரமைத்து தர வேண்டும் என பகுதியினர் எதிர்பார்க்கின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த நிழற்குடையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Vangapalayam ,
× RELATED கரூர் அரசு காலனி, வாங்கப்பாளைம் பிரிவில் மினி ரவுண்டானா அமைக்க கோரிக்கை