×

சாலையோரம் வேன் கவிழ்ந்து 15 பேர் காயம்

கரூர், மார்ச். 6: கரூர் மாவட்டம் வெள்ளியணை அருகே உள்ள ஒரு கோயிலுக்கு நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த 15க்கும் மேற்பட்ட பக்தர்கள் நேற்று சுவாமி தரிசனம் செய்ய வந்தனர். பின்னர், தரிசனம் முடித்து விட்டு, சாலையோரம் பஸ்க்காக காத்திருந்தனர்.அப்போது அந்த வழியாக வந்த வேனில், அனைவரும் ஏறி வெள்ளியணை வரை சென்றனர். வேன் தனியார் பாலிடெக்னிக் அருகே சென்ற போது, திடீரென எதிர்பாராத விதமாக சாலையோரம் கவிழ்ந்தது. இந்த விபத்தில் வேனில் ஏறிச் சென்ற 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்து அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். இந்த சம்பவம் குறித்து வெள்ளியணை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Tags :
× RELATED இதுவரை 15 பேர் பாதிப்பு ராமேஸ்வரத்தில்...