கோவை: கோவை காந்திபுரம் அருகே சித்தாபுதூர் டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக இருந்தவர் தர்மன் (51) இவர், நேற்று முன்தினம் பணி முடித்து, மேட்டுப்பாளையம் ேராடு பேருந்து நிலையத்துக்கு டவுன் பஸ்சில் சென்றார். அப்போது கடுமையான உடல் சோர்வுடன் காணப்பட்டார். திடீரென மயக்கம் அடைந்து, அந்த இடத்திலேயே உயிரிழந்து விட்டார். பணிச்சுமை மன அழுத்தம் காரணமாக உயிரிழந்துள்ளார் என விசாரணையில் தெரியவந்தது.
