செய்யாறில் தண்ணீர் பிடித்தபோது மின்சாரம் பாய்ந்து மாணவி பலி

செய்யாறு, மார்ச் 6: செய்யாறில் தண்ணீர் பிடித்தபோது மின்சாரம் தாக்கி பள்ளி மாணவி பலியானார். செய்யாறு புதுத்தெருவை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன், கார் டிரைவர். இவரது மனைவி விஜயலட்சுமி. இவர்களது மூத்த மகள் வைஷாலி(16), தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். இந்நிலையில், வைஷாலி நேற்று காலை தனது வீட்டில் நகராட்சி சப்ளை செய்த குடிநீரை பிடித்துள்ளார். அப்போது, தரை தொட்டியில் இருந்து மோட்டார் வழியாக வீட்டிற்குள் செல்லும் தண்ணீர் பைப்பை பிடித்துள்ளார். இதில் திடீரென மின்சாரம் தாக்கி வைஷாலி தூக்கிவீசப்பட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அங்கிருந்த அவரது சித்தப்பா மோகன்ராஜ் ஓடிவந்து வைஷாலியை தூக்க முயன்றார். அப்போது அவரும் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். அவர்கள் இருவரையும் குடும்பத்தினர் மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் வைஷாலி பரிதாபமாக இறந்தார். ேமாகன்ராஜ் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்த புகாரின்பேரில் செய்யாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் நிவாசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories:

>