சேத்துப்பட்டில் போலீசார் அதிரடி தனியார் லாட்ஜில் சூதாடிய 13 பேர் கைது ஆட்டோ, 4 பைக்குகள், ₹30 ஆயிரம் பறிமுதல்

சேத்துப்பட்டு, மார்ச் 6: சேத்துப்பட்டு தனியார் லாட்ஜில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 13 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், ஆட்டோ, 4 பைக்குகள், ₹30 ஆயிரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். சேத்துப்பட்டு பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு தனியார் லாட்ஜில் சிலர் சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக, நேற்று முன்தினம் இரவு போளூர் டிஎஸ்பி அறிவழகனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், டிஎஸ்பி அறிவழகன், இன்ஸ்பெக்டர் பிரபாவதி, சப்- இன்ஸ்பெக்டர் வரதராஜன் மற்றும் போலீசார், சம்பந்தப்பட்ட லாட்ஜிற்கு சென்று அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது, அங்குள்ள ஒரு அறையில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டவர்களை மடக்கி பிடித்தனர். விசாரணையில், அவர்கள் சேத்துப்பட்டு பழம்பேட்டை, லூர்து நகர், பூங்குணம் ஆகிய பகுதியை சேர்ந்த ஜெயக்குமார்(26), ஏழுமலை(30), பிரபு(24), சீனுவாசன்(49), அஜிஸ்(24), வெற்றி(27), ஜெகதீஸ்(28), பாலாஜி(21), அகஸ்ட்டின்(21), தினேஷ்குமார்(30), பிரவீன்(30), சம்சுதீன்(23), துரைசாமி(66) என்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் அவர்களிடம் இருந்து ₹30 ஆயிரம் ரொக்கம், ஒரு ஆட்டோ, 4 பைக்குகளை பறிமுதல் செய்தனர். மேலும், இதுகுறித்து சேத்துப்பட்டு போலீசார் வழக்குப்பதிந்து 13 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>