×

திமுக கூட்டணியில் தான் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளது: வீரபாண்டியன் விளக்கம்

சென்னை: காங்கிரஸ் எம்.பி ப.சிதம்பரம் நேற்று கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களை சந்தித்து பேசினார்.

பின்னர் இதுகுறித்து கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
இது மரியாதை நிமித்தமான சந்திப்புதான். கம்யூனிஸ்ட் இயக்கம் எளிதாக எந்தவொரு கூட்டணியிலும் இணையாது. தற்போதைய நிலையில் நாங்கள் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில்தான் நீடிக்கிறோம். தமிழகத்தில் குடியரசு தலைவர் ஆட்சி வரக் கூடாது என்தால் தவெக ஆட்சிக்கு வெளியில் இருந்து ஆதரவளித்துள்ளோம்.

பிரவீன் சக்ரவர்த்தி எங்களை நேரில் சந்தித்தார். தவறான புரிதலால் ‘கூட்டணி’ என்ற சொல்லை அவர் பயன்படுத்தியது பிழையானதே. நான் அவ்வாறு பேசியிருக்கக் கூடாது, என்று அவரே எங்களிடம் வருத்தம் தெரிவித்தார். எவராக இருந்தாலும் ஊடகங்களையும், பத்திரிகைகளையும் புறக்கணித்துவிட்டுச் செல்லக் கூடாது. இடைத்தேர்தல் சூழலில் எங்களது கட்சி கூடி விவாதித்து, முடிவை அறிவிப்போம். இவ்வாறு தெரிவித்தார்.

Tags : Dimuka Alliance ,Communist Party ,Veerapandian ,Chennai ,Congress ,M. P p. Chidambaram ,Secretary of State ,communist ,
× RELATED முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய...