வேலூர்- ஆற்காடு சாலையில் செப்டிக் டேங்க் இல்லாத 2 லாட்ஜ்களுக்கு நோட்டீஸ்

வேலூர், மார்ச் 6: வேலூர்- ஆற்காடு சாலை கிரவுன் தியேட்டர் அருகே செப்டிக் டேங்க் இல்லாத 2 லாட்ஜ்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் நேற்று நோட்டீஸ் வழங்கினர். வேலூர்மாநகராட்சியில் உள்ள பெரும்பாலான லாட்ஜ்களில் இருந்து இரவு நேரங்களில் செப்டிக் ேடங்க் கழிவுநீர் மின் மோட்டார்கள் பயன்படுத்தி, மழைநீர் கால்வாய்களில் வெளியேற்றப்படுகிறது. சில லாட்ஜ்களில் செப்டிக் டேங்க் கட்டாமலேயே, நேரடியாக மழைநீர் கால்வாய்களில் செப்டிக் டேங்க் கழிவுநீர் வெளியேற்றப்படுகிறது. இதுதொடர்பாக தினகரன் நாளிதழில் கடந்த மாதம் படத்துடன் கூடிய செய்தி வெளியானது. இந்நிலையில் மாநகராட்சி கமிஷனர் சங்கரன் உத்தரவின்பேரில், 2வது மண்டல சுகாதார அலுவலர் சிவக்குமார் தலைமையிலான அதிகாரிகள் வேலூர் கிரவுன் தியேட்டர் அருகே உள்ள லாட்ஜ்களில் சோதனையிட்டனர்.

அப்போது கிரவுன் தியேட்டர் அருகே, தோட்டபாளையம் பகுதியில் உள்ள ஒரு லாட்ஜில் செப்டிக் டேங்க் இல்லாதது தெரியவந்தது. அதேபோல் மற்றொரு லாட்ஜில் செப்டிக் டேங்க் கழிவுநீரை மழைநீர் கால்வாயில் விடுவதற்கு மோட்டார் பயன்படுத்துவது தெரியவந்தது. இதையடுத்து 2 லாட்ஜ் உரிமையாளர்களுக்கும் மாநகராட்சி சார்பில் நேற்று நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். அதிகாரிகள், தொடர்ந்து இரவு நேரங்களில் லாட்ஜ்களில் சோதனை செய்து, செப்டிக் டேங்க் கழிவுகளை வெளியேற்றும் மற்ற லாட்ஜ்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கையும்

Related Stories: