×

காட்பாடி அடுத்த அரும்பருதி கிராமத்தில் சதவீத வாக்குப்பதிவு விழிப்புணர்வு வண்ணக்கோலம் மகளிர் குழுவினர் அசத்தல்

வேலூர், மார்ச் 6: வேலூர் மாவட்ட மகளிர் திட்டம் சார்பில் மாவட்டம் முழுவதும் 100 சதவீத வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக காட்பாடி அடுத்த அரும்பருதி கிராமத்தில் மகளிர் திட்டம் சார்பில் அக்கிராமத்தை சேர்ந்த மகளிர் சுயஉதவிக்குழுக்கள் ரங்கோலி கோலம் வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இக்கோலத்தில் வாக்களிக்க தயாராவோம் என்று ஆங்கில வாசகத்தில் குறிப்பிட்டிருந்தனர். மேலும் மகளிர் சுயஉதவிக்குழுக்களை சேர்ந்த பெண்கள் தங்கள் கைகளில் மெகந்தியால் 100 சதவீதம் வாக்களிப்போம் என வரைந்து, கைகளில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பேனர்களை ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.இந்நிகழ்ச்சியில் மகளிர் திட்ட வட்டார இயக்க மேலாளர் இந்திரா மற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளர்கள், மகளிர் சுயஉதவிக்குழுக்களை சேர்ந்த பெண்கள் கலந்து கொண்டனர். படவிளக்கம்100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி காட்பாடி அரும்பருதி கிராமத்தில் மகளிர் குழுவினர் ரங்கோலி கோலம் வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Tags : Arumbaruthi ,Katpadi ,
× RELATED வேலூர் காட்பாடி சாலையில் கழிவுநீர் கால்வாய் அடைப்பால் மக்கள் அவதி