×

கொடைரோடு ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த அறிவுரை

நிலக்கோட்டை, ஜூன் 6: கொடைரோடு ரயில் நிலையத்திற்கு தெற்கு ரயில்வே மதுரை கோட்ட மேலாளர் ஓம்பிரகாஷ் மீனா திடீர் வருகை தந்தார். பின்னர் ரயில் நிலைய வளாகத்தில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு செய்த அவர், பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.

தொடர்ந்து ரயில் நிலையம் முழுவதையும் ஆய்வு செய்த அவர், மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ள ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட காவல் நிலையத்திற்கு பதில் புதிய கட்டிடம் கட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் ரயில் நிலையத்தில் குடிநீர், மின்விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் அறிவுறுத்தினார்.

 

Tags : Kodairode ,station ,Nilakottai ,Southern Railway Madurai ,Divisional Manager ,Omprakash Meena ,Kodairode railway station ,
× RELATED கிரிக்கெட் விளையாடிய போது ஏற்பட்ட...