×

நடத்துனர், ஓட்டுனருக்கு பணி நிறைவு பாராட்டு விழா

திருத்துறைப்பூண்டி, ஜூன் 6: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அரசு போக்குவரத்து கழத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற நடத்துனர் வடிவேல், ஓட்டுனர் சிவானந்தம் ஆகியோருக்கு தொமுச சார்பில் பணி நினைவு பாராட்டு விழா திருத்துறைப்பூண்டி அரசு போக்குவரத்து கழக கிளை பணிமனையில் நடைபெற்றது.

தொமுச மாநில பொது செயாளர் பாண்டியன் தலைமை வகித்தார். தொமுச கிளை தலைவர் அசோகன் முன்னிலை வகித்தார், செயலாளர் அருணகிரி வரவேற்றார்.விழாவில் எம்எல்ஏமாரிமுத்து, நகர்மன்ற தலைவர் கவிதா பாண்டியன், அரசு போக்குவரத்து கழக கிளை மேலாளர் சுரேஷ் மற்றும் தொமுச கிளை நிர்வாகிகள் வாழ்த்தி பேசினார்கள். முடிவில் தொமுச கிளை பொருளாளர் பாஸ்கர் நன்றி கூறினார்.

 

Tags : Thiruthuraipoondi ,Domusa ,Vadivel ,Sivanandham ,Thiruthuraipoondi Government Transport Corporation ,Thiruvarur district ,
× RELATED கிரிக்கெட் விளையாடிய போது ஏற்பட்ட...