×

காலை உணவு திட்டத்தை விரிவுபடுத்த வலியுறுத்தல்

திருத்துறைப்பூண்டி, ஜூன் 6: உலக சுற்று சூழல் தினத்தை முன்னிட்டு திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ஒன்றியம் கொத்தமங்கலம் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் சுற்று சூழல் பேணுவதில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திவரும் தூய்மை பணியாளர்களின் நலத்தை பேணுகின்ற வகையில், நகர் புறங்களில் தூய்மை பணியாளர்களுக்கு செயல்படுத்தப்பட்டுவரும் காலை உணவு திட்டத்தை போலவே கிராம பஞ்சாயத்துக்களில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கும் காலை உணவு சிறப்பு திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என்கிற கோரிக்கையை கொத்தமங்கலம் ஊராட்சி சோழன் நகர் குடியிருப்போர் நல சங்கத்தின் சார்பில் சிறப்பு கிராம சபை வாயிலாக அரசுக்கு வைக்கப்பட்டது. உலக சுற்று சூழல் பாதுகாப்பு தினத்தில் சுற்றுச் சூழல் பாதுகாப்பில் ஈடுபடும் தங்களின் நலனில் அக்காரை கொண்டு வைக்கப்பட்டிருக்கும் இந்த கோரிக்கைக்கு தூய்மை பணியாளர்கள் தங்களது நன்றியை தெரிவித்துள்ளனர்.

 

Tags : Thiruthuraipoondi ,Gram Sabha ,Kothamangalam Panchayat ,Thiruthuraipoondi Union ,Thiruvarur District ,World Environment Day ,
× RELATED கிரிக்கெட் விளையாடிய போது ஏற்பட்ட...