- உலக சுற்றுச்சூழல் தின மரக்கன்று நடும் விழா
- சயவனம்
- சீர்காழி
- உலக சுற்றுச்சூழல் தினம்
- பூம்புகார் பாம் டிரஸ்ட்
- செம்பனார்கோவில் கோட்டா வன விரிவாக்கம்
- பூம்புகார் சாயவனம்
- செம்பனார்கோவில் கோட்டா வன விரிவாக்கம்...
சீர்காழி, ஜூன் 6: உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பூம்புகார் பனை அறக்கட்டளையும், செம்பனார்கோவில் கோட்ட வன சரகம் விரிவாக்கமும் இணைந்து ஆல மரங்கள் மற்றும் அரசமரம் நடவு நிகழ்ச்சி பூம்புகார் சாயவனம் ஆற்றங்கரை திடலில் நடைபெற்றது. நிகழ்ச்சியை செம்பனார்கோவில் கோட்ட வன விரிவாக்க சரகர் குமரவேல் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், பூம்புகார் தருமகுளம் சரஸ்வதி வித்யாலயம் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.
பள்ளி மாணவர்களுக்கு, வன சரகர் குமரவேல், வனவர் சுகந்தி ஆகியோர் சுற்றுச்சூழல் தினத்தை பற்றியும் மரங்களின் முக்கியத்துவத்தை பற்றியும் விளக்கி கூறினார். நிகழ்ச்சியில் பூம்புகார் பனை அறக்கட்டளை நிர்வாகிகள் சிவசுப்பிரமணியன், பிரியா ரவீந்திரன், கண்ணகி, தர்ஷன், கோகுல் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை அண்ணாமலை பல்கலைக்கழக தத்துவதுறை பேராசிரியர் ரவீந்திரன் செய்திருந்தார்.
