ஐந்துரோட்டில் 27 முறை ஹெல்மெட் அணியாமல் சென்றவர் சிக்கினார் ₹2,700 அபராதம் வசூல்

சேலம், மார்ச் 6: தமிழகத்தில் முதன்முறையாக நவீன தொழில்நுட்ப தானியங்கி கேமரா மூலம், டூவீலரில் ஹெல்மெட் அணியாமல் செல்வோரை கண்டுபிடித்து அபராதம் செலுத்தும் கேமரா, சேலம் 5 ரோட்டில் உள்ள ஈரடுக்கு மேம்பாலத்தில் அமைக்கப்பட்டது. இங்கு 20 கேமராக்கள் இருக்கிறது. இந்த வழியாக ஹெல்மெட் அணியாமல் செல்வோரை படம் பிடித்து, அவர்களது செல்போனுக்கு மெசேஜ் அனுப்பப்பட்டு வருகிறது. இந்த கேமரா கடந்த டிசம்பர் மாதம் முதல் செயல்பாட்டிற்கு வந்துள்ளது. கடந்த 3 மாத அளவில் 40,815 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதில் 4,072 பேர் மட்டுமே அபராதம் செலுத்தியுள்ளனர்.

இந்நிலையில், இந்த நவீன தொழில்நுட்ப தானியங்கி கேமரா வேலை செய்யவில்லை எனவும், அவ்வாறு அபராதம் விதித்தால் யார் கட்டுவார்கள்? என்ற எண்ணத்தில் பொதுமக்கள் ஹெல்மெட் அணியாமல் சென்று வந்தனர். இந்நிலையில், ஒரே நபர் 27 முறை அவ்வழியாக ஹெல்மெட் அணியால் சென்று வந்தது தெரியவந்தது. போலீசார் அவரது வண்டி எண், வீட்டு முகவரியை வைத்து பார்த்ததில், அவரது பெயர் தங்கராசு என்பதும், தனியார் மருத்துவமனையில் வேலை செய்து வருவதும் தெரியவந்தது. அவரை பிடித்து விசாரித்தபோது, ஹெல்மெட் அணியாமல் சென்றதும், தனக்கு வரும் மெஜேசை கண்டுகொள்ளாமல் விட்டதாகவும் தெரிவித்தார். இதையடுத்து 27 முறை ஹெல்மெட் அணியாமல் சென்றதற்காக ₹2,700 அபராதம் செலுத்தினார்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘நவீன தொழில்நுட்ப தானியங்கி கேமரா மூலம் வழக்கு பதிவு செய்யப்படுகிறது. சுமார் ₹38ஆயிரம் பேர் அபராதம் செலுத்தாமல் இருக்கிறார்கள். இதற்காக 10 பேர் கொண்ட போலீஸ் குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் தினமும் 200 பேருக்கு செல்போனில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிப்பார்கள். எனவே, ஹெல்மெட் அணியாமல் சென்று, வழக்கு பதிவு செய்யப்பட்டவர்கள் அபராதத் தொகையை செலுத்த வேண்டும்,’ என்றனர்.கோயில் பூட்டை உடைத்து உண்டியல் கொள்ளைவாழப்பாடி அருகே துக்கியாம்பாளையத்தில் மாரியம்மன் கோயில் பகுதியில் அரசமர பெருமாள் கோயில் உள்ளது. இங்கு பண்டிகை நாட்கள் மற்றும் முக்கிய விசேஷ நாட்களில் வழிபாடு நடப்பது வழக்கம். நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில், அங்கு வந்த மர்ம நபர்கள், பூட்டை உடைத்து கோயிலுக்குள் புகுந்துள்ளனர். 2 உண்டியல்களை உடைத்து அதில் இருந்த காணிக்கைகளை அள்ளிக்கொண்ட மர்ம நபர்கள், தப்பி செல்லும்போது அங்கிருந்த ஒலிபெருக்கி மற்றும் ஆம்ப்ளிபயரையும் எடுத்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர். இந்நிலையில், நேற்று காலை அவ்வழியாக சென்ற மக்கள் கோயில் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடப்பதை கண்டு திடுக்கிட்டனர். இதுகுறித்து, கோயில் நிர்வாகிக்கு தகவல் தெரிவித்தனர். இதுபற்றிய புகாரின் பேரில், வாழப்பாடி போலீசார் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டனர். மேலும், வழக்குப்பதிந்து இந்த கொள்ளையில் ஈடுபட்டவர்கள் உள்ளூரைச் சேர்ந்தவர்களா அல்லது வெளியூர்களில் இருந்து வந்து கைவரிசை காட்டிச் சென்றனரா என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: