பள்ளிக்கு சென்றபோது சைக்கிள் மீது பைக் மோதி மாணவன் பலி

பள்ளிபாளையம், மார்ச் 6: பள்ளிபாளையம் அடுத்த செட்டியார் கடை பகுதியை சேர்ந்த குமார் மகன்  சந்தோஷ்குமார்(16). இவர் சௌதாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு  படித்து வந்தார். தற்போது, அரசு பள்ளிகளில் 10ம் வகுப்பு  மாணவர்களுக்கு வகுப்புகள் நடந்து வருகிறது. நேற்று காலை,  சந்தோஷ்குமார் வழக்கம் போல் தனது நண்பன் வசந்துடன் தனித்தனியே  சைக்கிளில் பள்ளிக்கு சென்றனர். மெயின் ரோட்டில் இருவரும்  சைக்கிளில் சென்ற போது பின்னால், ஈரோடு கொங்கம்பாளையத்தை சேர்ந்த  கார்த்திக் (31) என்பவர் சங்ககிரியில் இருந்து ஓட்டி வந்த பைக், சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட  சந்தோஷ்குமார் மீது பைக் ஏறியது. இதில் படுகாயமடைந்து துடித்த மாணவனை, அக்கம்பக்கத்தினர் மீட்டு  பள்ளிபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். அங்கு பரிசோதித்த  மருத்துவர்கள், வரும் வழியிலேயே இறந்துபோனதாக தெரிவித்தனர்.  விபத்தை ஏற்படுத்திய கார்த்திக் காயங்களுடன், ஈரோடு அரசு மருத்துவமனையில்  சேர்க்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து வெப்படை போலீசார் வழக்குபதிவு  செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>