திருச்செங்கோட்டில் ₹2 லட்சத்துக்கு கொப்பரை விற்பனை

திருச்செங்கோடு, மார்ச் 6: திருச்செங்கோடு கூட்டுறவு சங்கத்தில் நேற்று விவசாயிகள் கொண்டு வந்த 60 மூட்டை கொப்பரை ₹2 லட்சத்திற்கு விற்பனையானது. திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், நேற்று கொப்பரை ஏலம் நடந்தது. சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 60 மூட்டை கொப்பரையை கொண்டு வந்திருந்தனர். விவசாயிகள் முன்னிலையில் அதிகாரிகள் ஏலத்தை நடத்தினர். இதில் கொப்பரை கிலோ ₹91.15 முதல் ₹135.90 வரை விற்பனையானது. ஒட்டு மொத்தமாக ₹2 லட்சத்திற்கு ஏலம் நடந்ததாக, கூட்டுறவு சங்க தலைவர் திருமூர்த்தி, மேலாண் இயக்குனர் ரவிக்குமார் தெரிவித்தனர்.

Related Stories:

>