×

சீர்காழி நகரில் மின்தடையால் பொதுமக்கள் அவதி: தீப்பந்தம் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

 

சீர்காழி: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகரில் அமைந்துள்ள கோவிந்தராஜன் நகரில்200க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் நேற்று மாலை 5 மணிக்கு மின்சாரம் தடைபட்டுள்ளது இதனால் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மாணவ மாணவிகள் முதியோர்கள் நோயாளிகள் பல்வேறு சிரமத்திற்கு ஆளாகி வந்துள்ளனர். மாலை 5 மணி முதல் 8:30 மணிக்கு மேல் மின்சாரம் வராததால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேறி வாசலில் முடங்கி கிடந்தன.

மின்சாரம் தொடர்ந்து அறிவிக்கப்படாத மின்தடையால் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் உடனடியாக மின்சாரம் வழங்க வேண்டி தீப்பந்தம் ஏந்தி மின்சாரம் உடனே வழங்க வேண்டும் என கோஷங்களை எழுப்பிபோராட்டத்தில் ஈடுபட்டன. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது

Tags : Sirkazhi ,Govindarajan ,Sirkazhi Nagar, Mayiladudura District ,
× RELATED சென்னை விமான நிலையம் வந்த அண்ணாமலைக்கு ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு!