மாவட்டம் முழுவதும் பொது இடங்களில் இருந்த 7,102 பேனர்கள் அகற்றம்

கிருஷ்ணகிரி, மார்ச் 6: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொது இடங்களில் இருந்த 7102 விளம்பரங்கள் அகற்றப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊத்தங்கரை(தனி), பர்கூர், கிருஷ்ணகிரி, வேப்பனஹள்ளி, ஓசூர், தளி உள்ளிட்ட 6 சட்டப்பேரவை தொகுதிகளில் தேர்தல் விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளதால் அரசு கட்டிடங்கள், சாலை மேம்பாலங்கள், பொது இடங்களில் எழுதப்பட்டுள்ள விளம்பரங்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள், சிலைகள் மறைப்பதற்கும், அரசியல் கட்சி கொடி கம்பங்கள் அகற்ற வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான ஜெயசந்திரபானு ரெட்டி உத்தரவிட்டிருந்தார். அதன்படி 6 சட்டப்பேரவை தொகுதிகளில் பொது இடங்களில் இருந்த கட்சி சுவர் விளம்பரங்கள், பேனர்கள், போஸ்டர்கள், கட்சி கொடி கம்பங்கள் உட்பட 7 ஆயிரத்து 102 விளம்பரங்கள் அகற்றப்பட்டுள்ளது. இதேபோல் தனியார் இடங்களில் இருந்த 671 கட்சி விளம்பரங்கள் அழிக்கப்பட்டுள்ளது. 6 தொகுதிகளிலும் தேர்தல் விதிமுறை மீறல் தொடர்பாக, இதுவரை வழக்குகள் எதுவும் பதிவாகவில்லை.

Related Stories: