கெலவரப்பள்ளி அணையில் படர்ந்த ஆகாய தாமரைகள்

ஓசூர், மார்ச் 6:கெலவரப்பள்ளி அணையில் தண்ணீரை உறிஞ்சி ஆவியாக்கும் ஆகாயத்தாமரைகளை அகற்றி, தூர்வார வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஓசூர் அருகே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கெலவரப்பள்ளி அணை கட்டப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் நந்தி மலையில் உற்பத்தியாகும் தென்பெண்ணையாறு, பெங்களூரு நகர பகுதிகள் வழியாக கொடியாளம் கிராமத்தின் அருகே தமிழகத்திற்குள் நுழைகிறது. அணையின் இருபுறமும் அமைக்கப்பட்டுள்ள 2 கால்வாய்கள் மூலம், சுமார் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இந்நிலையில், கெலவரப்பள்ளி அணையில் ஆகாயத்தாமரைகள் ஆக்கிரமித்து வளர்ந்துள்ளதால், தண்ணீரானது வேகமாக குறைந்து வருகிறது. ஆகாயத்தாமரை நாளொன்றுக்கு சுமார் 4 லிட்டர் வரை தண்ணீரை உறிஞ்சி ஆவியாக்க கூடியதால் நீர்மட்டம் குறைந்து வருகிறது. எனவே, ஆகாயத்தாமரைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: