திமுக சார்பில் தேர்தல் ஆலோசனை கூட்டம் தேன்கனிக்கோட்டை,

மார்ச் 6: தளி சட்டமன்ற தொகுதி மதகொண்டப்பள்ளி, தளி, ஜவளகிரி, மாடக்கல், அஞ்செட்டி, தேன்கனிக்கோட்டை, கெலமங்கலம் ஆகிய பகுதிகளில் திமுக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர் தளி பிரகாஷ் எம்எல்ஏ கலந்து கொண்டு, நிர்வாகிகளுடன் சட்டமன்ற தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார். இதில் தளி ஒன்றிய குழு தலைவர் சீனிவாசலுரெட்டி, தெற்கு ஒன்றிய செயலாளர் திவாகர், அஞ்செட்டி ஒன்றிய செயலாளர் நாகன், கெலமங்கலம் ஒன்றிய பொறுப்பாளர் கணேசன், தேன்கனிக்கோட்டை பேரூர் செயலாளர் சீனிவாசன், கெலமங்கலம் பேரூர் பொறுப்பாளர் கருணாநிதி, அவைத்தலைவர்கள் நாகராஜ், கிரிஷ், துணை செயலாளர் முனிராஜ், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் மம்தா மஞ்சுநாத்  மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: