×

சிதம்பரம் புறவழிச்சாலையில் அனுமதியின்றி வீட்டில் வைத்திருந்த 80 கிலோ வெடி மருந்துகள் பறிமுதல்

சிதம்பரம், மார்ச் 6:  சிதம்பரம் புறவழிச் சாலையில் செந்தில் (55) என்பவருக்கு சொந்தமான வெடிமருந்து குடோன் மற்றும் பட்டாசு கடை உள்ளது. இந்த பகுதியிலேயே அவரது வீடும் அமைந்துள்ளது. இந்த வீட்டில் செந்தில் அனுமதியின்றி வெடி மருந்து பொருட்களை வைத்துள்ளதாக போலீசார் மற்றும் வருவாய் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. சப்-கலெக்டர் மதுபாலன், டிஎஸ்பி லாமேக், பறக்கும் படை தாசில்தார் சத்தியன் உள்ளிட்ட அதிகாரிகள் நேற்று நேரடியாக சென்று ஆய்வு செய்தனர்.  அப்போது செந்தில் வீட்டில் சல்பர், அலுமினிய பவுடர் கறித்தூள் பொட்டாஸ் உள்ளிட்டவை அனுமதியின்றி வைக்கப்பட்டு இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. பின்னர் அவரது வெடிமருந்து குடோனை ஆய்வு செய்த போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் அங்கு இருந்த இருப்பு பதிவேட்டை பார்த்து ஆய்வு செய்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அனுமதியின்றி வீட்டில் வைத்திருந்த 80 கிலோ வெடி மருந்துகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இது குறித்து பறக்கும் படை தாசில்தார் சத்யன் அண்ணாமலைநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து செந்திலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Cettamaram ,
× RELATED புதுவை முழுவதும் 2வது நாளாக 150...