2021 தேர்தல் அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சியில் 10.5% இடஒதுக்கீடு குறித்து கேள்வி பாமகவினர் திடீர் வாக்குவாதம்

விழுப்புரம், மார்ச் 6: 2021 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பாமக சார்பில் தேர்தல் அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சி நேற்று தி.நகரில் உள்ள நட்சத்திர விடுதியில் நடந்தது. நிகழ்ச்சியில் பாமக நிறுவனர் ராமதாஸ், இளைஞர் அணி தலைவர் அன்புமணி ஆகியோர் வீடியோ கான்பரன்சில் கலந்து ெகாண்டனர். பாமக தலைவர் ஜி.கே.மணி, ஏ.கே.மூர்த்தி தேர்தல் அறிக்கைைய வெளியிட்டனர். பாமக தேர்தல் அறிக்கை குறித்து ராமதாஸ், அன்புமணி விளக்கினர். அதன்பிறகு பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணியிடம் மாற்றம், முன்னேற்றம், அன்புமணி என்று கடந்த தேர்தலில் முன்வைத்து தேர்தல் பிரசாரம் செய்தீர்கள். மக்கள் உங்களை ஏற்காததால் அதை கைவிட்டு விட்டீர்களா என்று கேள்வி எழுப்பினர். அதற்கு, அன்புமணி இதே கேள்வி ஏற்கனவே கேட்டு விட்டீர்கள். ஒரே கேள்வி எத்தனைமுறை தான் கேட்பீர்கள் என்றார். மேலும் மாற்றம், முன்னேற்றம், அன்புமணி என்பதை தற்போது மாற்றம், முன்னேற்றம், தமிழகம் என்று மாற்றிக் கொண்டதாக கூறினார்.

இதை தொடர்ந்து 10.5 சதவீதம் இடஒதுக்கீடு, சி.என்.ராமமூர்த்தி என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததன் அடிப்படையில்தான் தற்போது தமிழக அரசு வழங்கியுள்ளதாக கூறுகின்றனரே என்று கேள்வி எழுப்பியதற்கு, பாமக நிறுவனர் ராமதாஸ் முதலில் பதில் அளிக்கவில்லை. சி.என்.ராமமூர்த்தி உங்களுக்கு நண்பரா என கேள்வி கேட்டு, கண்டவர்களுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது என்றார்.

ஆனால், அன்புமணி 10.5 சதவீத இடஒதுக்கீடு பெறுவதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் எத்தனை ஆண்டுகள் என்ன மாதிரியான போராட்டங்கள் நடத்தினார் என்பது குறித்து விளக்கி கூறினார். இதையடுத்து பத்திரிகையாளர் 10.5 சதவீத இடஒதுக்கீடு குறித்து மேலும் கேள்வி கேட்க முற்றப்பட்ட போது அவருடைய மைக் ஆப் செய்யப்பட்டது. தொடர்ந்து பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்க முற்பட்ட போது பாமக தலைவர் ஜி.கே.மணி நிகழ்ச்சியை முடிப்பதாக கூறி நன்றி கூறினார்.

 அதன் பிறகு அங்கிருந்த பாமகவினர் ஒரு சிலர் கேள்வி கேட்ட பத்திரிகையாளரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மூத்த நிர்வாகிகள் சிலர் வாக்குவாதம் செய்த நிர்வாகிகளை அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இதனால் நேற்று பாமக தேர்தல் அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சியில் சிறிது நேரம் ெபரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், பாமகவினர் நேற்று 2021ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் அறிக்கையின் புத்தகத்தை வெளியிட்டனர். அந்த புத்தகத்தின் அட்டையின் பின்பகுதியில் பாமகவின் சின்னமான மாம்பலம், அதிமுகவின் இரட்டை இலை, பாஜவின் தாமரை சின்னம் இருந்த நிலையில் கூட்டணி கட்சியான தேமுதிகவின் முரசு சின்னம் இடம்பெறவில்ைல என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>