×

பாஜகவில் இருந்து அண்ணாமலை ராஜினாமா செய்ததை ஏற்றுக்கொண்டதாக கட்சித் தலைமை அறிவிப்பு!!

டெல்லி: பாஜகவில் இருந்து விலகுவதாக கடிதம் வழங்கிய அண்ணாமலையின் ராஜினாமா முடிவு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் தெரிவித்துள்ளார். இரண்டு நாட்களுக்கு முன்பு டெல்லி சென்ற அண்ணாமலை, பாஜக தேசியத் தலைவர் நிதின் நபினை சந்தித்தார். அப்போது, பாஜகவில் இருந்து விலகுவதாக 5 பக்க கடிதத்தை வழங்கியதாக கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் அண்ணாமலை சந்தித்து பேசினார்.

இந்தச் சந்திப்புகளின்போது, பாஜகவில் இருந்து விலகும் முடிவை கைவிடுமாறு அண்ணாமலையிடம் இரு தலைவர்களும் வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது. ஆனால், பாஜக தலைமை இதுவரை விலகலை ஏற்காதபோதும் தனிக்கட்சி தொடங்கும் தனது முடிவில் அண்ணாமலை உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது. பாஜகவில் இருந்து விலகும் முடிவை அதன் தலைமையான ஆர்எஸ்எஸ் இடம் அண்ணாமலை கூறி உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

அடுத்த சில மாதங்களுக்குள் தனது புதிய கட்சியின் பெயரை முறைப்படி அறிவிக்க அண்ணாமலை திட்டமிட்டுள்ளதாகவும், இதற்கான முதற்கட்டப் பணிகள் மற்றும் நிபுணர்களுடனான ஆலோசனையை ஏற்கனவே ரகசியமாகத் தொடங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது. தேசிய பார்வை கொண்ட மாநிலக் கட்சியாகவும், தமிழ்நாட்டின் குரலை எதிரொலிக்கும் மதச்சார்பற்ற கட்சியாகவும் தனது புதிய கட்சியை கட்டமைக்க அண்ணாமலை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags : Annamalai ,BJP ,Delhi ,president ,Nitin Nabin ,
× RELATED வங்கிகளின் குறுகியகால கடன்களுக்கான...