×

சிக்கண்ணா அரசு கல்லூரியில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருப்பூர், மார்ச் 6: திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 சார்பில், கல்லூரி வளாகத்தில் உள்ள குமரன் அரங்கில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நாட்டு நலப்பணித் திட்ட அலகு-2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் வரவேற்றார். கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக திருப்பூர் வடக்கு காவல் உதவி ஆணையர் வெற்றிவேந்தன் கலந்து கொண்டு, மாணவர்களுக்கு வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். அப்போது அவர் பேசுகையில், 100 சதவீதம் அனைவரும் வாக்களிக்க வேண்டும். வாக்களிக்க வேண்டியது நம் ஒவ்வொரு குடிமகனின் கடமை என்று கூறினார். தொடர்ந்து, முதன்முதலாக வாக்களிக்கும் மாணவர்களை வைத்து மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. இறுதியாக மாணவ செயலர் சந்தோஷ் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில் 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Sikkanna Government College ,
× RELATED திருமழிசை பேரூராட்சி சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி