×

தைவானுக்கு போனது தப்பாய்யா..? 4 நியூசிலாந்து எம்பிக்கள் சீனாவுக்குள் நுழைய தடை

வெலிங்டன்: சீனாவின் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து பல்வேறு தீவுகளை உள்ளடக்கிய தைவான் தனி குடியரசு நாடாக பிரிந்தது. இதை ஏற்க மறுத்து தைவான் மீது சொந்தம் கொண்டாடும் சீனா அதனை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவர முயற்சித்து வருகிறது. அதன்ஒரு பகுதியாக தைவானுடன் அரசியல் ரீதியான உறவு வைத்து கொள்ளும் நாடுகளுக்கு கண்டனம் தெரிவித்து வரும் சீனா, தைவானுக்கு செல்லும் அரசியல் தலைவர்கள், அதிகாரிகள் சீனாவுக்கு வரவும் தடை விதித்துள்ளது.

இந்நிலையில் தைவானுக்கு சென்ற நியூசிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் சீனாவுக்கு நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்து நாட்டின் ஏசிடி கட்சியை சேர்ந்த லாரா மெக்ளூர், இடதுசாரி தொழிலாளர் கட்சியை சேர்ந்த டங்கன் வெப், என்இசட் ஃபர்ஸ்ட் கட்சியின் டேவிட் வில்சன் மற்றும் தேசிய கட்சியின் மவுரீன் பக் ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடந்த மே மாதம் தைவான் சென்று, அமைச்சர்கள், அதிகாரிகளை சந்தித்து பேசினர். இந்நிலையில் தைவான் சென்ற நியூசிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் 4 பேரும் சீனாவுக்கு நுழைய ஓராண்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

Tags : Taiwan ,New Zealand ,China ,Wellington ,
× RELATED ஈரான் போர் தீர்மான விவகாரத்தில்...