லாட்டரி, மது விற்ற 4 பேர் கைது

ஈரோடு, மார்ச் 6: பவானி மார்க்கெட் வீதியில் லாட்டரி விற்பனை செய்யப்படுவதாக பவானி போலீசாருக்கு கிடைத்த தகவலையடுத்து அப்பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது, லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த பவானி, மோளக்கவுண்டன்புதூரை சேர்ந்த முருகேசன் (38) என்பவரை போலீசார் கைது செய்து லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர். இதேபோல், சித்தோடு போலீசார் நடத்திய ரெய்டில் லாட்டரி சீட்டுகள் விற்ற காலிங்கராயன்பாளையம், அணைக்கட்டு பகுதியை சேர்ந்த தனசண்முகமணி (51) என்பவரை கைது செய்தனர். அம்மாபேட்டை போலீசார் நடத்திய ரெய்டில் பூனாச்சி ஏரிக்கரையில் மது விற்பனையில் ஈடுபட்டிருந்த செம்படாபாளையத்தை சேர்ந்த ஈஸ்வரமூர்த்தி (45), எடப்பாடி, கோனேரிபட்டியை சேர்ந்த சங்கர் (50) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

Related Stories:

>