ஈரோடு மாவட்டத்தில் மேலும் 9 எஸ்.ஐ.கள் பணியிட மாற்றம்

ஈரோடு, மார்ச் 6: சட்டமன்ற தேர்தலையொட்டி ஈரோடு மாவட்டத்தில் 9 எஸ்.ஐ.க்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சட்டமன்ற தேர்தலையொட்டி 3 ஆண்டுக்கு மேல் பணியாற்றும் எஸ்.ஐ.க்கள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 23 எஸ்.ஐ.க்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில், நேற்று மேலும் 9 எஸ்.ஐ.க்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஈரோடு ஆயுதப்படை எஸ்.ஐ.க்கள் சுரேஷ்குமார், முத்து, பெருந்துறை போக்குவரத்து ராஜன், விஜயராஜன், அந்தியூர் போக்குவரத்து விக்டர் ஆகியோர் நீலகிரி மாவட்டத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கோபி போக்குவரத்து எஸ்.ஐ. கிருஷ்ணகுமார், சத்தியமங்கலம் போக்குவரத்து தண்டபாணி ஆகியோர் கோவை மாவட்டத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

ஈரோடு போக்குவரத்து எஸ்.ஐ. விஜயகுமார் திருப்பூருக்கும், கோபி போக்குவரத்து மகேஸ்வரன் நீலகிரி மாவட்டத்துக்கும் மாற்றம் செய்யப்பட்டனர். இதேபோல், திருப்பூரில் இருந்து பழனிசாமி, முத்துசெல்வம், பாண்டியராஜன், செந்தில் குமார், வெங்கடாசலம், ஜெயகுமார், குருசாமி மற்றும் கோவை ராஜன் பாபு, தேவராஜ், பத்மாவதி ஆகியோர் ஈரோடு மாவட்டத்திற்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் இருந்து பிலிப் சார்லஸ், மணிகண்டன், கலைவாணன், லோகநாதன் ஆகியோர் ஈரோடு மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.இதற்கான உத்தரவை மேற்கு மண்டல ஐ.ஜி. தினகரன் பிறப்பித்துள்ளார்.

Related Stories:

>