×

சீர்காழியில் மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுகிறார்களா?

சீர்காழி, ஜூன் 4: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தென்பாதி தனியார் பள்ளி எதிரே மயிலாடுதுறை எஸ்பி ஸ்டாலின் உத்தரவின் பேரில் போக்குவரத்து சப் இன்ஸ்பெக்டர்கள் மணியரசன், பிரைச்சந்திரன், ஏட்டுகள் கார்த்திக் கலைமணி, மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகளை நிறுத்தி சோதனை செய்தனர்.

சோதனையில் மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுகிறார்களா? என கண்டறிய மிஷினை வாயில் வைத்து ஊதும்படி கூறி சோதனை செய்தனர். மேலும் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வந்த நபர்களுக்கும், ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களுக்கும், அபராதம் விதித்தனர். தொடர்ந்து போக்குவரத்து காவல்துறை சப் இன்ஸ்பெக்டர் மணியரசன் வாகன ஓட்டிகளிடம் மது அருந்தி விட்டு வாகனம் ஓட்ட கூடாது.

அப்படி ஓட்டினால் கண்டிப்பாக வாகனம் பறிமுதல் செய்யப்படும். உயிரை பாதுகாக்க அனைவரும் கண்டிப்பாக ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்ட வேண்டும். ஓட்டுநர் உரிமம் கட்டாயம் வைத்திருக்க வேண்டும். 18 வயதுக்கு குறைவானவர்களிடம் வாகனத்தை ஓட்ட அனுமதிக்க கூடாது. மீறி அனுமதித்தால் பெற்றோர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். வாகன ஓட்டிகள் அனைவரும் போக்குவரத்து விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என அறிவுரை வழங்கினார்.

 

Tags : Sirkazhi ,Maniyarasan ,Praychandran ,Ettalu Kartik Kalaimani ,Mayiladudhara ,SP Stalin ,Sirkazhi Tenpathi Private School ,Mayladudhara ,
× RELATED தன்னார்வ குருதி கொடையாளருக்கு பாராட்டு