மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் பொதுக்கூட்டம்

பெரும்புதூர், மார்ச் 5:  பெரும்புதூர் ஒன்றிய திமுக சார்பில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா  பொது கூட்டம் நடந்தது. பெரும்புதூர் சட்டமன்ற தொகுதி திமுக சார்பில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா,  பொதுக்கூட்டம்   பெரும்புதூர், பஸ் நிலையம் அருகே நேற்று நடந்தது.  பெரும்புதூர் தெற்கு ஒன்றிய செயலாளர் கோபால் தலைமை வகித்தார். இளைஞரணி அமைப்பாளர் ராமமூர்த்தி வரவேற்றார். குன்றத்தூர் ஒன்றிய செயலாளர் படப்பை மனோகரன்,  பெரும்புதூர் வடக்கு ஒன்றிய செயலாளர் கருணாநிதி, பேரூர் செயலாளர்கள் சதீஷ்குமார், சத்தியமூர்த்தி, ஜபாருல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர். காஞ்சி வடக்கு மாவட்ட செயலாளர் தா.மோ.அன்பரசன் எம்எல்ஏ, தலைமை கழக பேச்சாளர் நாஞ்சில் சம்பத் ஆகியோர் கலந்து கொண்டு, அதிமுக அரசின் அவலங்கள் குறித்து பேசினர். காஞ்சிபுரம் மாவட்ட துணை அமைப்பாளர்கள் குண்ணம் முருகன், வளர்புரம் ஜார்ஜ், பொடவூர் ரவி, சந்தவேலூர் சத்யா, ஒன்றிய அமைப்பாளர்கள் சோகண்டி பாலா, மொளச்சூர் ராஜேந்திரன், மண்ணூர் சரவணன், வீரபாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>