பெண்ணிடம் நகை பறிப்பு

உத்திரமேரூர், மார்ச் 5: உத்திரமேரூர் அருகே மொபட்டை இடித்து கீழே தள்ளி, பெண்ணிடம் 5 சவரன் நகையை, பைக் ஆசாமிகள் பறித்து சென்றனர். உத்திரமேரூர் அடுத்த கல்யாணமேடு கிராமத்தை சேர்ந்தவர் விஜயலட்சுமி (46). இவரது மகள் பவித்ரா. நேற்று காலை விஜயலட்சுமி, உத்திரமேரூர் அடுத்த கல்யாணமேடு பகுதிக்கு மகளுடன், மொபட்டில் புறப்பட்டார். கல்யாணமேடு அருகே சென்றபோது, பின்னால் வேகமாக வந்த பைக், மொபட் மீது மோதியது. இதில், நிலைதடுமாறி 2 பேரும் கீழே விழுந்தனர். உடனே, பைக்கில் வந்த மர்மநபர்கள், விஜயலட்சுமி கழுத்தில் இருந்த 5 சவரன் நகையை பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் தப்பினர். புகாரின்படி உத்திரமேரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

Related Stories:

>