மாமல்லபுரம் பேரூராட்சியை கண்டித்து ஊரக சுகாதார பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

மாமல்லபுரம், மார்ச் 5: மாமல்லபுரம் பேரூராட்சியை கண்டித்து ஊரக சுகாதார பொது பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாமல்லபுரம் சிறப்பு நிலை பேரூராட்சியில் காலியாக உள்ள தூய்மை பணியாளர் பணியிடங்களை நிரப்புவதில் அதிகாரிகள் முறைகேடு செய்வது உள்பட பல குற்றச்சாட்டுகள் கூறப்படுகிறது. இதனை, கண்டித்து ஊரக உள்ளாட்சி சுகாதார பணியாளர்கள் சங்கம் தமிழக அரசு மற்றும் பேரூராட்சியை கண்டித்து நேற்று 50க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏஐடியுசி காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் தேவராஜன் தலைமை தாங்கினார். இதில் திமுக, மதிமுக, விசிக, காங்கிரஸ், சிபிஎம் உள்பட பல்வேறு கட்சியினர் கலந்து கொண்டு 10 ஆண்டுகளாக பணிபுரியும் துப்புரவு பணியாளருக்கு வேலை வழங்குவதில் முறைகேடு செய்யும் தமிழக அரசையும், பேரூராட்சியையும் கண்டித்து கோஷமிட்டனர். இதில், , மாவட்ட பொதுச் செயலர் ஜஹாங்கீர், மாவட்ட தலைவர் சங்கையா, தேசியக்குழு உறுப்பினர் ஜெகதீசன், விசிக ஒன்றிய செயலாளர் இசிஆர் அன்பு, சாலமன், ஐயப்பன், வரதன், அழகேசன், நரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>