×

தேர்தல் தொடர்பான புகார்களுக்கு 24 மணிநேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை: கலெக்டர் ஆய்வு

திருவள்ளூர், மார்ச் 5: தேர்தல் தொடர்பான புகார்களை பெற 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை மற்றும் ஊடக சான்றிதழ் மற்றும் ஊடக கண்காணிப்பு அறையை கலெக்டர் ஆய்வு செய்தார். 2021 சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து, திருவள்ளூர் மாவட்ட கலெட்டரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான பொன்னையா, தேர்தல் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார். இதைதொடர்ந்து,  தேர்தல் தொடர்பான புகார்களை பெறுவதற்காக 24 மணி நேரமும், கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் கட்டுப்பாட்டை அறையை கலெக்டர் பொன்னையா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதே போல் ஊடகங்களில் தேர்தல் சம்பந்தமாக வரும் விளம்பரங்கள், செய்திகள் ஆகியவற்றை கண்காணிக்க அமைத்துள்ள ஊடக கண்காணிப்பு அறையையும் ஆய்வு செய்து, அங்கு என்னென்ன பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.

Tags :
× RELATED வாக்கு எண்ணிக்கை மையங்களில்...