ஏப்ரல் 8 முதல் 19ம் தேதி வரை தீர்த்தீஸ்வரர் கோயிலில் பங்குனி மாத பிரம்மோற்சவம்

திருவள்ளூர், மார்ச் 5: திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோயிலில் பங்குனி மாத பிரம்மோற்சவம் வரும் 8ம் தேதி முதல் 19ம் தேதி வரை நடக்கிறது. திருவள்ளூரில், திரிபுரசுந்தரி சமேத அருள்மிகு தீர்த்தீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இங்கு, பங்குனி மாத பிரம்மோற்சவம் வரும் 8ம் தேதி மாலை 7 மணிக்கு விக்னேஸ்வரர் உற்சவத்துடன் துவங்கி வரும் 19ம் தேதி வரை தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறுகிறது. இதையொட்டி 9ம் தேதி காலை 7:30 மணிக்கு கொடியேற்ற நிகழ்ச்சி நடக்கிறது. விழா நாட்களில் காலை, மாலை வேலைகளில் வெவ்வேறு வாகனத்தில் உற்சவர்  வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.  இதன் முக்கிய நிகழ்வான 11ம் தேதி இரவு மகா சிவராத்திரி, 13ம் தேதி ரிஷப வாகனத்தில் பஞ்சமூர்த்தி தரிசனம், 16ம் தேதி இரவு திருக்கல்யாணம், 18ம் தேதி காலை தீர்த்தவாரி  நடைபெறுகிறது. தினமும் காலை, மாலை வேத பாராயணமும் நடைபெறுகிறது. பங்குனி மாத பிரம்மோற்சவ விழா ஏற்பாடுகளை திரிபுரசுந்தரி சமேத அருள்மிகு தீர்த்தீஸ்வரர் கோயில் பரம்பரை தர்மகர்த்தா ரா.ரவி குருக்கள் செய்து வருகிறார்.

Related Stories:

>