×

திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக செயலாளர்கள் கூட்டம்: ஆவடி சா.மு.நாசர் அறிக்கை

ஆவடி, மார்ச் 5: திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று மாலை நடக்கிறது என மாவட்ட செயலாளர் ஆவடி சா.மு.நாசர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை. திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள்  அவசர ஆலோசனை கூட்டம்  ஆவடி ரயில் நிலையம் அருகில் உள்ள மாவட்ட தேர்தல் கள அலுவலகத்தில் (வார் ரூம்) இன்று மாலை 4 மணியளவில் எனது தலைமையில் நடக்கிறது. கூட்டத்தில், மாநில ஆதிதிராவிட நலக்குழு செயலாளரும், பூந்தமல்லி தொகுதி எம்எல்ஏவுமான ஆ.கிருஷ்ணசாமி, மாநில மாணவரணி இணை செயலாளர் பூவை ஜெரால்டு, மாநில சட்டத்துறை இணைச்செயலாளர் இ.பரந்தாமன், மாவட்ட துணை செயலாளர்கள் ஜெ.ரமேஷ், காயத்ரி ஸ்ரீதரன், பொதுக்குழு உறுப்பினர்கள் ம.ராஜி, ஜி.ஆர்.திருமலை ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். முன்னதாக, ஆவடி தெற்கு மாநகர பொறுப்பாளர் ஜி.ராஜேந்திரன் வரவேற்கிறார். கூட்டத்தில், மார்ச் 7ம் தேதி திருச்சியில் நடக்கும் மாபெரும் பொதுக்கூட்டம், சட்டமன்ற பொதுத்தேர்தல் - 2021, கட்சியின் ஆக்கப்பணிகள் குறித்து ஆலோசனை செய்யப்படுகிறது. எனவே, அவசர ஆலோசனை கூட்டத்துக்கு அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Tags : Tiruvallur Central District ,DMK ,Avadi Samu Nasser ,
× RELATED திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு