×

விதிகளை மீறி கட்டிடங்கள் கட்டியதால் ‘பாப்’ பாடகரின் கிளப்பிற்கு ‘சீல்’- சண்டிகரில் அதிகாரிகள் அதிரடி

 

சண்டிகர்: சண்டிகரில் விதிகளை மீறி கட்டப்பட்ட பிரபல பாடகர் பாட்ஷாவிற்கு சொந்தமான கிளப்பிற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். பஞ்சாப் மாநிலம் சண்டிகரின் செக்டர் 26 பகுதியில் பிரபல ராப் பாடகர் பாட்ஷாவிற்கு சொந்தமான ‘சாகோ’ என்ற இரவு நேர கிளப் செயல்பட்டு வந்தது. கடந்த 2024ம் ஆண்டு ஏப்ரல் 25ம் தேதி இந்த கட்டிடத்தில் தரைத்தளம் மற்றும் இரண்டாவது தளங்களில் உரிய அனுமதியின்றி கூடுதல் கட்டுமானங்கள் செய்யப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது. இது குறித்து விளக்கம் கேட்டு சண்டிகர் நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அங்கீகரிக்கப்பட்ட வரைபடத்திற்கு மாறாக சமையலறை மற்றும் கழிப்பறைகள் அமைக்கப்பட்டிருந்தது குறித்து அதிகாரிகள் விளக்கம் கேட்டிருந்தனர்.

இந்த நோட்டீஸிற்கு உரிய பதில் அளிக்கப்படாத நிலையில், சண்டிகர் நிர்வாகத்தின் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனையில் ஈடுபட்டு கிளப்பிற்கு சீல் வைத்தனர். தரைத்தளத்தில் குளிர்பதன கிடங்கு மற்றும் இரண்டாவது தளத்தில் தற்காலிக மேற்கூரைகள் அமைத்து விதிகளை மீறியது ஆய்வில் உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து கட்டிடம் முழுமையாக மூடப்பட்டது. இதேபோல் செக்டர் 26 பகுதியில் விதிமுறை மீறலில் ஈடுபட்ட மேலும் 2 கிளப்புகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளதோடு, பல நிறுவனங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

Tags : CHANDIGARH ,Badshah ,Sago ,Sector 26 ,Chandigarh, Punjab ,
× RELATED விமான எரிபொருள் விலையை கட்டுப்படுத்த...